பேராயர். சேத் மேத்யூஸ் கிறிஸ்துவுக்குள் வாழ்வு ஊழியங்களின் ஸ்தாபகரும் தலைமை போதகரும் ஆவார். இவர் கிறிஸ்தவ போதகர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார், அங்கு இவர் பிறப்பதற்கு முன்பே தேவனின் சேவைக்காக அர்பணிக்கப்பட்டார். இவர் தேவனின் சேவையில் மூன்றாம் தலைமுறை ஆவார். இவரது இளமை பருவத்தில் தேவன் தனது அற்புதமான பணிக்காக இவரை அழைத்தபோது, தேவனின் அழைப்பிற்கு பதிலளிக்க இவருக்கு கடினமாக இருந்தது, ஆகவே இவர் அதை மறுத்துவிட்டார். அந்த தருணம் இவருக்கு வாழ்வும் சாவுமாக இருந்தது. ஆனால் இவருடைய பணிக்கான தேவனின் திட்டம் மிகவும் வலிமை வாய்ந்தது. அது இவரது தெய்வீக அழைப்பை ஏற்க வழிவகுத்தது. பின்னர், இவர் 1991 ம் ஆண்டு முதல் பெதனி ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் தியாலஜி, நற்செய்திக்கான ஆசிய பைபிள் செமினரி, அப்பொல்லோஸ் வேதாகம பல்கலைக்கழகம் மற்றும் டேய்ஸ்பிரிங் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது இறையியல் படிப்பை படிக்க தேவன் உதவி செய்தார்.

பின்னர் இவர் பாஸ்டர். யூனிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் 24/7 அப்போஸ்தலராக இருப்பதில் நம்பிக்கை கொண்டவர். மேலும் இவர்கள் தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்யும் கேப்ரியல் என்னும் மகனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.