வேதாகம நடைபாதை
“நீங்கள் என் வார்த்தையிலே நிலைத்திருப்பீர்களாயின். நீங்கள் உண்மையாக என் சீஷர்களாக இருப்பீர்கள் நீங்கள் சத்தியத்தை அறிந்து கொள்வீர்கள். சத்தியமே உங்களை விடுவிக்கும்.”யோவான் 8:31-32
இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷராக இருப்பதற்கான அடிப்படை. தேவனுடைய வார்த்தையை கட்டாயமாக எப்போதும் ஆர்வமுடன் தெரிந்துகொள்வது என்பதே வேதாகமம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஒரு விசுவாசியின் வலிமையான வாழ்க்கை. அவன் வேதாகமத்தை தெரிந்து கொள்வதிலும். தியானிப்பதிலும், அதனடிப்படையில் வாழ்வதிலும் வேரூன்றியுள்ளது.
திருச்சபை வரலாற்றில் நாம் நோக்கும்போது. தேவனுக்காக மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான அம்சம் இருந்தது அவர்கள் தேவனுடைய வார்த்தையின் மனிதர்கள். அவர்கள் தேவனுடன் நெருக்கமாக நடக்க. அவர் வசனத்தில் நித்யமாக நேரத்தை செலவிட்டார்கள்.
அப்போஸ்தலர் பவுல். தேவனுடைய வார்த்தையை நாம் அறிந்திருக்க வேண்டிய இரண்டு முக்கிய காரணங்களை கூறுகிறார்:
1. இயேசு கிறிஸ்துவை அறிந்து. அவருடைய இரட்சிப்பைப் பெறுதல் – மீட்பு. கிருபை. நித்திய வாழ்வு ஆகிய அனைத்தையும் நாம் வேதாகமத்தின் வாயிலாகவே அறிகிறோம்.
2. ஆவிக்குரிய வளர்ச்சி பெற்று. தேவனுடைய வேலைக்காக தயார் செய்யப்படுதல் வேதாகமம் நம்மை போதித்து, திருத்தி. தேவனுடைய திட்டங்களை நிறைவேற்ற தயார் செய்வதாகும்.
வேதாகம வழி என்பது. அறிவுக்காக மட்டும் அல்ல. மாற்றத்திற்காகவே தேவனுடைய வார்த்தையினை அணுகும் ஒரு பயணம். இது சத்தியத்தை காணும், கிருபையில் வளரும். தேவனுடைய வார்த்தையின் மூலம் சுதந்திரமாக நடக்கும் ஒரு ஆன்மீக பயணமாகும்.