வேதாகம நடைபாதை

சரியாக பைபிள் படிக்காவிட்டால் நாம் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக இருக்க முடியாது என்று பைபிள் நமக்குக் கற்பிக்கிறது. தேவனுடைய வார்த்தையை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீசராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31-32 .)

நாம் ஏன் வேதவசனங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்களை பவுல் நமக்குத் தருகிறார். முதலில் நாம் இயேசு கிறிஸ்துவை அறிந்து, அவருடைய இரட்சிப்பைப் பெற வேண்டும் என்பதே. அவரைப் பற்றியும், மீட்பைப் பற்றியும் நாம் வார்த்தையின் மூலம் அறிந்து கொள்கிறோம். இரண்டாவது நோக்கம் நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக ஆவிக்குறிய ரீதியில் வளர வேதம் நமக்கு உதவுகிறது நாம் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அந்த வளர்ச்சிக்கான வழிமுறைகள் கற்பித்தல் (கோட்பாடு), கண்டித்தல், திருத்துதல் மற்றும் பயிற்சி. கற்பித்தல் நமக்குப் பாதையைக் காட்டுகிறது. அதில் நாம் நடக்க வேண்டும்; கண்டிப்பது நாம் பாதையை விட்டு எங்கு சென்றோம் என்பதைக் காட்டுகிறது; சரிசெய்தல் நமக்கு சொல்கிறது பாதையில் திரும்புவது எப்படி; மற்றும் நீதியில் பயிற்சி அந்த பாதையில் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.

இதன் அர்த்தம், பரிசுத்த வேதாகமம் என்பது மனிதனின் நிஜ வாழ்விற்கான விரிவான வழிகாட்டி புத்தகமாகும். இதனை நாங்கள் வேதாகம நடைபாதை பயிற்ச்சி வகுப்புகளின் மூலம் கற்று தருகின்றோம். இது ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ள பயிற்சி வகுப்பாகும்.