நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். (1 கொரிந்தியர் 3:6)
 
சபை நடுதல் என்பது ஒரு புதிய தேவாலயத்தை நிறுவுவதில் விளையும் ஒரு செயல்முறையாகும்.  இது ஒரு புதிய தேவாலயத்தை உருவாக்குவது மட்டுமல்ல, மக்களை அவர்களின் துன்மார்க்கத்திலிருந்து மீட்டு உருவாக்கி அவர்களுக்கு இயேசுவினால் உண்டாகும் நித்திய ஜீவனை அளிப்பதாகும். இந்த தலைமுறையில் ஒரு புதிய பாத்திரமாக இருக்க தேவனால் அழைக்கப்பட்டுள்ளோம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அழைப்பின் மூலம், எல்லா வகையிலும், குறிப்பாக நம் தலைமுறையில் தேவனுடைய மாபெரும் கட்டளையை நிறைவேற்ற முயல்கின்றோம். நம் சபை ‘புதிய தொடக்கத்தை’ தேடுபவர்கள் மற்றும் ‘அன்பு மற்றும் இரக்கத்தில் வளர விரும்புபவர்கள் மற்றும் இயேசு கிறிஸ்துவில் ‘குடும்ப உறவை’ கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறது.