போதகர் பயிற்சி
அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 2 : 2 ல் எழுதுகிறார், அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனிதர்களிடத்தில்; ஒப்புவி. இந்த வேதாகம அடிப்படையில், சத்தியத்தின் நங்கூரம்: கிறிஸ்துவுக்குள் வாழ்வு போதகர் பயிற்சி என்பது சபையை மையமாக கொண்ட வேதாகம அடிப்படையிலான ஆயர் பயிற்சி பாடத்திட்டமாகும். பல ஆண்டுகளாக நிருபிக்கப்பட்ட அனுபவத்திலிருந்து பிறந்து, உள்ளுர் தேவாலயத்தின் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் இரண்டையும் சீர்திருத்துவதில், தேவனின் வார்த்தையின் வல்லமையில் நங்கூரமிடப்பட்ட தேவாலயங்களை வளர்க்க தேவன் அழைத்த போதகர்களுக்கு பயிற்சி அளிக்கின்றோம், மற்றும் மிகவும் பயனுள்ள தேவாலயத்திக்கு அனுபவமுள்ள போதகர்களை சீர்படுத்தும் ஊழியத்தையும் நிறைவேற்றுகின்றோம்.